வியாழன், 30 செப்டம்பர், 2010

ஒரு சின்ன வேண்டுகோள்

எழுதுரதுன்றது ரொம்ப கஷ்டம் அப்படின்றது நான் எழுத ஆரம்பிச்சப்ப
தான் தெரிஞ்ச்சி எனக்கு. உள்ள சரக்கு இருந்தத்தான் வெளியில வரும் அப்படின்றது எவ்வளவு பெரிய உண்மை, அது எனக்கு இப்ப நல்லா புரியுது. (ஐயோ! அந்த சரக்கு இல்லைங்க, ஆ ஐயோ! இந்த சரக்கும் இல்லைங்க)

ஆனா எவ்வளவு சந்தோசங்க, நான் எனக்காக எழுதும் போதும்,
என்னுடைய நினைவுகளை நானே எழுதும் போதும்.
என்னதான் நானே சமச்சி அதை நானே ருசிச்சி சாப்பிட்டாலும்,அதை
வேற யாராச்சும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும், அதுமாதிரி நீங்கள் எதாச்சும் சொன்னீங்கன்னா நானும் ரொம்ப சந்தோஷப் படுவேனுங்கோ.

டிஸ்கி : கமண்ட்டு போடுஙக அப்படின்றத இதைவிட டீசன்டா என்னால கேக்க முடியாதுங்கோ.

புதன், 29 செப்டம்பர், 2010

கிருக்கள்களின் ஆரம்பம்

ஆரம்பம்! ஆம்!
எனது பயணத்தின் ஆரம்பம்
எங்கிருந்து துவங்கி
எங்கு பயணிப்பது?
என்று என்னை நானே கேட்டு
எத்தனை நாள் காத்திருப்பது
எனக்கான பயணத்தினை, ஆம்!
என் வாழ்க்கை பயணத்தை துவக்குகிறேன்
என் பயணத்தினை யாருடன் துவக்குவது?
எனக்கு உயிர் கொடுத்தவளுடனா?
என் உயிருக்கு இணையானவளுடனா?
(என் உயிர் என்று நினைப்பவளுடனா?)
என் உயிர் வழிவந்த
என் உயிரானவளுடனா?
என்னை நானாக வாழவைத்த
என் உடன் பிறப்புக்களுடனா?
எத்தனை கேள்விகள்
என்னுள் தோன்றி
என்னை ஆண்டு கொண்டிருக்க
என்னை அறியாமல், நான்
என் பயணத்தினை துவக்கிவிட்டேன்
என்னுடன் இவர்கள் யாரும் இல்லாமல்
என் உயிரினும் மேலான
என் அன்பு நண்பர்களுடன்

என்றும் அன்புடன்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பதிவுலகத்தில் எனது முதல் படி

கடந்த ஓராண்டு காலமக நான் வலைபதிவுகளை படித்து
வருகின்றேன். அதன்மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால்
எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு) இன்று அதற்கான
முதல் படியை நீண்டதொரு விவாதத்திற்க்கு பிறகு
துவக்கிவிட்டேன். என்ன எழுதுவது என்று முடிவு
செய்யாவிட்டாலும் துவக்கப்பட்டுவிட்டது எனது
வலை உலக பயணம் எழுத்து என்ற வாகனத்தில்.

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் எழுதுவதால்
(அதுக்கு முன்னாடி நான் ரொம்ப சின்னபையங்க)
எனது சிந்தனை மற்றும் நினைவுகள் சற்று மழுங்கி
இருப்பதால் எனது எழுத்து மற்றும் மொழி
நடைகளில் சில அல்லது பல பிழைகள் இருக்கலாம்
தயவு செய்து எனது பதிவுகளை படிப்பவர்கள் அதில்
இருக்கும் தவறுகளை சுட்டிகாட்டி (பின்னூட்டமிட்டு)
என்னை வழிநடத்தி என்னுடைய இந்த பயணம் இனிதே
அமைய வாழ்த்துமாறு உங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பயணங்கள் தொடரும்.,,,,

காலம் என்னை மிக விரைவில் உங்களுடன் கலக்கும் என்னும் நம்பிகையில் நான் என் எழுத்துப் பயணத்தினை தொடர்கின்றேன்........