புதன், 9 ஜூலை, 2014

என்னவென்று சொல்வது..!!!


உறங்கும் வேளையில்
விழித்துக் கொண்டிருக்கின்றேன்..!!!

இரவு உறக்கத்தின் இடையிடையே ......
எத்தனை முறை விழிப்பது..??

உறங்க வேண்டிய இரவு நேரத்தில்
உறக்கம் களைந்து விழிப்பதும்..

விழித்திருக்க வேண்டிய
பகல் நேரத்தின் இடையிடையே ..
உறக்கம் வந்து வந்து செல்வதும்..

வாழ்கை பயணமானது
சொர்கத்தின் இடையில் நரகத்தையும்
நரகத்தின் இடையில் சொர்கத்தையும்
மாறி மாறி உணர்த்திக் கொண்டேயிருக்கிறது
எதனையும் முழுமை அடையவிடாமல்.

இன்னும் எத்தனை காலம் இந்த
சொர்கநரகமும், நரகசொர்கமும்.
விடைதெரியாமல்..
விழித்திருந்த இரவுகளே அதிகம்.......


வெள்ளி, 23 மே, 2014

வலியும் ஒருவித சுகமே.....


மீண்டும் அதே வலி...
எழுந்து கொண்டிருக்கின்றேன்.
விழுந்த இடம் தான் தெரியவில்லை...
ஆனால் இம்முறை அடி சற்று அதிகமே...
மனதில் ஒரு தெளிவில்லாத சிந்தனை !!
உறவின் நெருக்கத்திற்கு ஏற்ப
வலியின் வீரியம் அதிகமே.
ஏனோ மனம் மீண்டும் மீண்டும்,
ஏற்க மறுக்கிறது வலியின் நிவாரணத்தை.
போதை ஏற்றி வலியை மறப்பதை விட...
அவ்வலியில் உள்ள சுகத்தை முழுவதும்
ஏற்கவே மனம் விரும்புகிறது.
சுகமான சுமைகளை தாண்டி
சில சுகமான வலிகளை  மனம் விரும்பியே ஏற்கிறது.
சுமைகள் அடுத்தவர்களுக்காக சுமப்பது..
ஆனால் வலிகள் நமக்காக ... என்பதாலோ......!!!!!