வியாழன், 7 அக்டோபர், 2010

பிரிவுகள் (நன்மைக்கே)


பிரிவுகள் புதிதல்ல... ஆம்!
(எனக்கு மட்டுமல்ல...)
ஐந்து வயதில் துவங்கி....
முதல் முறையாக "தாயை பிரிந்து பள்ளி" சென்றது.
பின் எத்தனை பள்ளிகள்........
துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி,
ஒவ்வோரு பள்ளியின்
பிரிவிலும் நான் கற்றேன். ஆம்!
எனது உயர் கல்வியை,
"இளநிலை பட்டம்" !
"முதுநிலைப் பட்டம்" !
எத்தனை நண்பர்கள்.......!
இன்று அனைவரும் வேவ்வேறு திசைகளில்..
அத்தனை பிரிவுகளும் என்னை
வாழ்வின் வேவ்வேறு புதிய நிலைக்கு
உயர்றியதேயன்றி அது என்றும் என்னை
"துவளவிடவில்லை" !, அத்தனை பிரிவுகளும்
"என் வளர்ச்சிக்காக"! என்று எண்ணி நான்
என்னை வளப்படுத்திக்கொண்டவன்(ள்).!
"உன்பிரிவும் உன் நலனுக்காக" என்று
எண்ணும்போது இந்தப்பிரிவும் என்னை
"பலப்படுத்துமே! அன்றி", பலவீனப் படுத்தது!...
"உன் நலன் காக்க வாவது" அது என்னை வளப்படுதும்..
"உன் சம்மதத்துடன்" , இதோ, இப்போதே!
"உன்னை விட்டு உன் நினைவுகளுடன்"....!
பிரிகின்றேன்! "கவலை வேண்டாம் கண்ணே (ணா) .........."

1 கருத்து:

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

பிரிவுகள் இயல்பானதே

கருத்துரையிடுக